ஆனையிறவு ரயில் நிலையம் இன்று திறப்பு(படங்கள்)

391 0

 

anaijiravu-1ஆனையிறவு ரயில் நிலையம் மக்கள் பாவனைக்காக இன்று திறந்துவைக்கப்படவுள்ளது.

நாடு முழுவதுமுள்ள பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து நிர்மாணித்த ஆனையிறவு ரயில் நிலையம் மக்களிடம் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.

ரயில் நிலையத்தை அமைப்பதற்காக செலவிடப்பட்ட தொகை இரண்டு கோடி ரூபாவாகும்.

இதற்காக நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்கள் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு இரண்டு ரூபா வீதம் வழங்கினார்கள்.

ஆசிரியர்கள் பத்து ரூபா வீதம் நன்கொடைகளை இதற்காக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி சேகரிக்கப்பட்டது.

எஞ்சிய தொகையை கல்வியமைச்சு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

அநுராதபுரத்தை சேர்ந்த பாடசாலை மாணவர்களும் யாழ்ப்பாண பாடசாலை மாணவர்களும் இணைந்து ரயில் மூலம் ஆனையிறவு ரயில் நிலையத்தை இன்று வந்தடைந்ததையடுத்து குறித்த ரயில் நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான நிமல் சிறிபால டீ சில்வா, அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

anaijiravu-2 anaijiravu