அடுத்த ஐந்து வருடங்களில் மலையகத்தில் 50000 வீடுகள்

431 0

puthira-sikamaniமலை­யக மக்­களின் நலன்­க­ருதி அடுத்த ஐந்­து­வ­ருட காலத்­தினுள் ஐம்­ப­தா­யிரம் வீடுகள் அமைக்­கப்­பட உள்­ளன. மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் அபி­வி­ருத்தி அமைச்சும் மனித வள அபி­வி­ருத்தி நிதி­யமும் இது தொடர்பில் முனைப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றன என்று முன்னாள் பிர­தி­ய­மைச்சர் வி. புத்­தி­ர­சி­கா­மணி தெரி­வித்தார். மலை­யக வீட­மைப்பு நிலை­மைகள் குறித்து கருத்து வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்;மலை­யக வீட­மைப்பு என்­பது ஒரு நீண்­ட­கால பிரச்­சி­னை­யாக இருந்து வரு­கின்­றது. கடந்த காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட வீட­மைப்பு நட­வ­டிக்­கைகள் மந்த கதியில் இருந்­த­தா­கவும் பலரும் தெரி­வித்­தி­ருந்­தனர். மலை­யக மக்­களின் லயத்து வாழ்க்­கைக்கு முற்­றுப்­புள்ளி வைத்து தனி வீட்டு கலா­சா­ரத்தை முன்­னெ­டுக்க வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது.

அத்­தோடு இந் நட­வ­டிக்கை துரி­தப்­ப­டுத்­தப்­ப­டு­வதும் மிகவும் அவ­சி­ய­மாக இருக்­கின்­றது. இதன் ஒரு கட்­ட­மாக ஐம்­ப­தா­யிரம் வீடு­களை அடுத்த ஐந்­தாண்­டுக்குள் நிர்­மா­ணிப்­ப­தற்கு உரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இதில் முதற்­கட்­ட­மாக மண்­ச­ரிவு மற்றும் இயற்கை அனர்த்­தங்­களால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கென்று வீடுகள் நிர்­மா­ணித்துக் கொடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதன் அடிப்­ப­டையில் ஆயி­ரக்­க­ணக்­கான வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன.

மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் அபி­வி­ருத்தி அமைச்சும் மனி­த­வள அபி­வி­ருத்தி நிதி­யமும் மலை­யக மக்­களின் வீட­மைப்பு கருதி விசேட திட்­டங்­களை வகுத்து அர்ப்­ப­ணிப்­புடன் சேவை­யாற்றி வரு­கின்­றன. சுமார் ஒரு இலட்­சத்து 60 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட வீடுகள் எமது மக்­க­ளுக்கு தேவை­யாக உள்­ளது. எனினும் இந்த வீடு­களை நிர்­மா­ணிப்­பது தொடர்பில் பல்­வேறு பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. தோட்­டங்­களில் தொழி­லா­ளர்­களின் தொகை கணி­ச­மாக குறை­வ­டைந்­துள்­ளது.

இந்­நி­லையில் கடன்­களை பெற்றுக் கொடுத்து வீட­மைப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வதில் பல்­வேறு பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. இன்று தோட்­டத்தில் நூற்­றுக்கு 65 சத­வீ­த­மா­ன­வர்கள் தோட்­டத்தில் வேலை இல்­லா­த­வர்­க­ளாக உள்­ளனர். தோட்­டத்தில் வேலை இல்­லா­த­வர்­க­ளுக்கு கடன் வச­தி­களை எவ்­வாறு பெற்றுக் கொடுப்­பது? எவ்­வாறு அற­வி­டு­வது என்­பது மிக முக்­கிய பிரச்­சி­னை­யாக உள்­ளது. எனவே தோட்­டத்தில் வேலை செய்­யா­த­வர்கள் வீட­மைப்பில் பிரச்­சி­னை­யாகி உள்­ளனர். தோட்டப் பகு­தி­களில் இன்று அரச ஊழி­யர்கள் உள்­ளனர். ஆசி­ரி­யர்கள், சமுர்த்தி உத்­தி­யோ­கத்­தர்கள், கிராம சேவ­கர்கள் என்று பல­த­ரப்­பட்­ட­வர்­களும் இதில் உள்­ள­டங்­கு­கின்­றார்கள். அர­சாங்கப் பணி­பு­ரி­ப­வர்­க­ளுக்கு கடன் வழங்­கு­வ­தற்கு வேறு திட்­டங்­களும் நிறு­வ­னங்­களும் உள்­ளன.

அப்­ப­டி­யானால் அவர்­க­ளுக்கு காணி­களை பெற்றுக் கொடுப்­பதில் பிரச்­சி­னைகள் உள்­ளன. இந்த நிலையில் வீட­மைப்பு தொடர்பில் மேலெ­ழும்பும் பிரச்­சி­னை­க­ளுக்கு நாம் அடுத்த ஆறு மாத காலத்­திற்குள் உரிய தீர்­வினை பெற்றுக் கொடுக்க வேண்­டி­யுள்­ளது.

ஏற்­க­னவே நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள பல வீடுகள் தோட்­டத்தில் வேலை இல்­லா­த­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. சிலர் கொழும்­புக்கு வேலை­வாய்ப்பு கருதி சென்­றி­ருப்­ப­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது. இத்­த­கைய பல பிரச்­சி­னை­க­ளுக்கும் நாம் முகம்­கொ­டுக்க வேண்டி இருக்­கின்­றது. எது எவ்­வாறு இருப்­பினும் அடுத்த ஐந்து வருட காலத்­தினுள் ஐம்­ப­தா­யிரம் வீடு­களை மலை­ய­கத்தில் நிர்­மா­ணிப்­பது தொடர்பில் நாம் உறு­தி­யு­டனும் அர்ப்­ப­ணிப்­பு­டனும் செயற்­ப­டு­கின்றோம்.

அர­சாங்­கத்­துடன் அதற்­கான பேச்­சு­வார்த்­தை­களும் இடம்­பெற்று முடிந்­துள்ள என்­பதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். வீட­மைக்கும் முறை, நிதி­களை பெற்­றுக்­கொள்ளும் வழி­மு­றைகள் அர­சாங்­கத்தின் மூல­மாக பெற்றுக் கொள்­ளப்­படும் உத­விகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்­றுள்­ளன. ஒரு வீடு கட்­டு­வ­தற்கு பத்து இலட்சம் ரூபாய் வரையில் தேவைப்­ப­டு­கின்­றது. எவ்­வா­றெ­னினும் வீட­மைப்பு பணி­யினை நாம் செவ்­வனே நிறை­வேற்­றியே தீருவோம்.

இதற்கு மேலாக தோட்­டப்­புற மக்­களின் குடிநீர் வசதி, மல­ச­ல­கூட வசதி என்­ப­வற்றின் அபி­வி­ருத்தி கருதி உலக வங்கி உள்­ளிட்ட நிறு­வ­னங்கள் பல மில்­லியன் கணக்­கான அமெ­ரிக்க டொலர்­களை வழங்கி உத­வி­யுள்­ளன. சிறுவர் அபிவிருத்தி நிலையங்களும் மலையகத்தில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. தாய் சேய் நல திட்டங்களும் விருத்தி செய்யப்பட இருக்கின்றன. போசாக்கு வேலைத் திட்டங்களும் இதில் உள்ளடங்கும். மலையக அபிவிருத்தி கருதி பெருந்தொகை பணம் கிடைத்துள்ளது. இது ஒரு வரப்பிரசாதமாகும்.

தோட்ட மக்களின் வீடமைப்பு கருதி கம்பனிகளும் தனியார் தோட்டங்களும் காணிகளை பெற்றுக் கொடுத்து வருகின்றன. காணிகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் காணப்படவில்லை. இதுவும் ஒரு சாதக விளைவேயாகும் என்றார்.

Leave a comment