சு.க மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை

240 0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ளது.

இந்த கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை பெயரிடாத ஒரே ஒரு கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளது.

இந்த நிலையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதா? அல்லது தனியாக போட்டியிடுவதற்கான வேட்பாளரை களமிறக்குவதா? என்பது குறித்து மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.