ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உத்தியோகபூரவ் அறிவித்தல் எதனையும் இன்னும் வெளியிட வில்லை.
இந்நிலையில் இறுதியில் சுதந்திர கட்சி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையும் என்று நம்புவதாகவும் அவர்களுக்காக கதவு எப்போதும் திறந்து இருக்கிறது என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவினால் இன்று கொழும்பு மென்டரினா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேளிவிகளுக்கு பதிலளிக்கையில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ;
சுதந்திர கட்சி பொதுஜன பெரமுணவுடன் இணைவது குறித்து இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றே வண்ணமே உள்ளன.
அவர்கள் எப்போதும் எங்களுடன் இணைய முடியும்.அதற்கான கதவுகள் திறந்தே உள்ளன. எங்களின் புதிய கூட்டணியில் இதுவரையிலும் பல்வேறு கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன.
சுதந்திர கட்சியினர் கொள்கைகளில் மாறுப்பட்டவர்கள் இல்லை. அவர்கள் உறுதியான கொள்கைகளை கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியுடனான இந்த அரசாங்கத்தின் நான்கரை வருட அரசாங்கத்தில் அங்கம் வகித்த அனுபவமும் அவர்களுக்கு இருக்கிறது. ஆகவே இறுதியில் எங்களுடன் இணைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.