நீதியை நிலைநிறுத்த கோரி வவுனியாவில் கண்டனப் போராட்டம்

264 0

வவுனியா சுயாதீன இளைஞர்களால் கன்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை அவமதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,நீதிதுறையை அவமதித்த தேரர்களை கைதுசெய்யகோரியும், இந்து ஆலயங்களின் புனித தன்மையை பாதுகாக்குமாறு தெரிவித்தும் வவுனியா மாவட்ட சுயாதீன இளைஞர்களின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான வினோதரராதலிங்கம், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, செந்தில்நாதன் மயூரன், எம்.பி.நடராஜா, நகரசபைத் தலைவர் இ.கௌதமன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர் து.நடராஜசிங்கம், நகரசபை உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள், சுயாதீன இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.  என பலரும் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது ஜனநாயாக ஆட்சியா, பௌத்த பேரினவாத பிக்கு ஆட்சியா, காவி உடையில் காடையர்களா, மதப்பிரச்சினையை தூண்டாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழிப்பியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது ஜனநாயாக ஆட்சியா, பௌத்த பேரினவாத பிக்கு ஆட்சியா, காவி உடையில் காடையர்களா, மதப்பிரச்சினையை தூண்டாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழிப்பியிருந்தனர்.