சஜித் ஜனாதிபதியானால் ராஜபக்ஷ தரப்பு கள்ளர்களுக்கு தண்டனை வழங்கப்படும்-ஹேசா விதான

235 0
அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன் ராஜபக்ஷ தரப்பில் உள்ள அனைத்து கள்ளர்களுக்கும் உரிய தண்டனை வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதான தெரிவித்துள்ளார்.

´சஜித் வருகின்றார்´ என்ற தொனிப் பொருளிலான கூட்டத்தின் மற்றுமொரு கூட்டம் நேற்று (25) மாலை மாஹரகமவில் நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனை தெரிவித்ததுடன், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு தண்டனை வழங்க முற்பட்ட போதிலும் ´எமது கட்சியில் இருந்த சிலர் அதற்கு தடையாக இருந்தாக கூறினார்´.

கோட்டாபய ராஜபக்ஷ இதுவரை தப்பித்து, தப்பித்து செயற்படுகின்றார். ஆனால் நவம்பர் மாதம் ஆகும் போது அவருக்கு சஜித் பிரேமதாச கட்ட காற்சட்டையை அணிவிப்பார் எனவும் கூறினார்.

இங்கு உரையாற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனாசிங்கவும் உரையாற்றினார்.

´சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் கோட்டாபயவிடம், மஹிந்த கூறியுள்ளார்.

அதனால் முழு குடும்பமும் தற்போது அமெரிக்கா செல்ல தயாராக உள்ளது.

இந்த கூட்டத்திற்கு மாலை 4.45 அளவில் வருகைதந்த அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு கட்சி ஆதரவாளர்களினால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

அதன் பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாச, தான் ஒருபோதும் எவருக்கும் கைப்பாவையாக மாற போவதில்லை என தெரிவித்தார்.

நிபந்தனைகளுடன் கூடிய அரசியல் பயணத்திற்கு ஒருபோதும் தயாராக இல்லை எனவும், யாராவது ஒருவர் தம்மை ஒரு கைப்பாவையாக எண்ணி அழைத்துச் செல்லத் தயாராக இருந்தால் அது முடியாத காரியம் எனவும் சஜித் பிரேமதாச கூறினார்.

நாட்டின் ஜனநாயக வரலாற்றில் முதன்முறையாக எந்தவொரு நிபந்தனைகளுக்கும் உட்படாமல் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப கூடிய ஒரே வேட்பாளர் தான் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.