அழுத்தங்கள் மற்றும் முரண்பாடுகள் காரணமாகவே நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி துடிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் இதனை கூறியுள்ளார்.
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு கோருவது போன்று, சமஷ்டி ஆட்சி கட்டமைப்பை ஏற்படுத்துவது சாத்தியமற்றது எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
மாறாக நாட்டை ஒற்றுமைப்படுத்த கூடிய சமஷ்டியே தற்போது தேவையாக உள்ளது எனவும் மக்களை பிளவுப்படுத்தும் சமஷ்டி தேவையற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, கூட்டாட்சி ஒன்றை ஏற்படுத்துவதே சாலச்சிறந்தாகும் எனவும் அதிகார பரவலாக்கலின் ஊடாக மக்கள் பிரதிநிதிகளே நம்மையடைவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டு சேர போவதில்லை எனவும் அதுகுறித்த இறுதி முடிவை தேசிய மக்கள் சக்தியே எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மலைய மக்களின் வாழ்வியலை அபிவிருத்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க கொள்கை அளவில் இணங்கியுள்ளதாக தெரிவித்த அவர், அவர்களை ஏனைய இனத்தவருக்கு சமமாக அங்கீகரிக்க வேண்டியது கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளார்.