மாணவர்களதும் ஆசிரியர்களதும் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட ஆனையிறவு ரயில் நிலையம்

406 0

1838621579trainபாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து வழங்கிய ஒத்துழைப்பின் மூலம் இந்த நிலையம் நிர்மாணிப்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்வில் அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம், பிரதியமைச்சர் அசோகா அபயசிங்க ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொள்வார்கள்.

அனுராதபுர பாடசாலை மாணவர்களை ஏற்றிய ரயிலும், யாழ்ப்பாணம் மாணவர்களை ஏற்றிய ரயிலும் ஆனையிறவு ரயில் நிலையத்தை சென்றடைவதைத் தொடர்ந்து ரயில் நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு இரண்டு ரூபாவை வழங்கியதன் மூலம் இதனை நிர்மாணிக்க முடிந்துள்ளது. பாடசாலை ஆசிரியர்களும் நாளாந்தம் இரண்டு வாரங்களுக்கு பத்து ரூபாவை அன்பளிப்பாக வழங்கினார்கள்.

இதன் மூலம் ஒரு கோடி ரூபாவிற்கும் மேலான நிதி திரட்டப்பட்டது. எஞ்சிய தொகை கல்வியமைச்சினால் வழங்கப்பட்டது.

ரயில் நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்கென 2 கோடி ரூபா செலவிடப்பட்டதாக அரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.