ஆசிரியர் சேவைகள் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டம்

237 0

இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டம் காரணமாக பாடசாலைகளின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று தங்களது விடுமுறைக்கான விண்ணப்பத்தினை அனுப்பி வைப்பதற்காக ஆசிரியர்களினால் தபால் நிலையங்கள் நிரம்பி வழிகின்றன.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த நிலை நீடிப்பதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.