ரயில்வே தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கை

237 0

ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜானக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்

சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்களைச் சேர்ந்த ஊழியர்களே இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக இன்று காலை முதல் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று காலை பயணிக்கவிருந்த அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்பட்டிருந்தன.

எனினும் ஆறு அலுவலக ரயில் சேவைகள் மாத்திரம் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் வரை இன்று காலை சேவையில் ஈடுபட்டிருந்தன.

அதேபோன்று அனைத்து தபால் ரயில்களின் சேவைகளும் நேற்று இரவு முதல் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, உடன் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் பயணிகள் எதிர்நோக்கும் அசௌகரியத்தைத் தடுக்கும் வகையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.