நீரா­வியடி விவ­காரம் ; மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு

315 0

முல்­லைத்­தீவு மாவட்டம் பழைய செம்­மலை நீரா­வி­யடிப் பிள்­ளையார் ஆலய தீர்த்தக் கேணியில் நீதி­மன்ற கட்­ட­ளையை மீறி புத்த பிக்­குவின் சட­லத்தை எரி­யூட்­டி­யமை, சட்­டத்­த­ரணி சுகாஸ் மற்றும் மக்கள் மீது பொலிஸார் மேற்­கொண்ட அடா­வடி தொடர்பில் வவு­னி­யாவில் உள்ள மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

 

பிள்­ளையார் ஆலய நிர்­வா­கி­களும் தமிழர் மர­பு­ரிமை பேர­வை­யி­னரும் இணைந்து நேற்று முற்­பகல் குறித்த முறைப்­பாட்­டினை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

குறித்த சம்­ப­வங்­க­ளுக்கு எதி­ராக நேற்­று ­முன்­தினம் முல்­லைத்­தீவில் ஆர்ப்­பாட்டப் பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந் தமையும் குறிப்பிடத்தக்கது.