தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பத­வியை உரு­வாக்க தெரி­வுக்­குழு பரிந்­து­ரைக்கும்

280 0

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு, தமது விசா­ரணை அறிக்­கையை இறுதி செய்­வ­தற்­கான கூட்­டத்தை நேற்­று­முன்­தினம் நடத்­தி­யது. இதில் ஐந்து பிர­தான விட­யங்கள் குறித்து பரிந்­து­ரை­களை முன்­வைக்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

நேற்­று­முன்­தினம் பிற்­பகல் 2.15 மணி தொடக்கம் மாலை 5 மணி­வரை தெரி­வுக்­கு­ழுவின் உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்ற வளா­கத்தில் இதற்­கான ஆலோ­ச­னை­களில் ஈடு­பட்­டனர். இதில் ராஜித சேனா­ரத்ன, ஆசு மார­சிங்க, ரவூப் ஹக்கீம் ஆகியோர் தவிர ஏனைய உறுப்­பி­னர்கள் பங்­கேற்­றனர்.

இந்தக் கூட்­டத்தில், பாது­காப்பு மற்றும் புல­னாய்வுத் துறை­களில் சீர்­தி­ருத்­தங்­களை அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்தும் வகை­யிலும், இஸ்­லா­மிய தீவி­ர­வாதம் மற்றும் பௌத்த அடிப்­ப­டை­வா­தத்தின் எழுச்­சியை கட்­டுப்­ப­டுத்­தவும் கண்­கா­ணிக்­கவும் வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்தும் வகை­யிலும், பரிந்­து­ரை­களை முன்­வைக்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அத்­துடன், சீர்­தி­ருத்தம் உள்­ளிட்ட சட்ட தாம­தங்­களை நிவர்த்தி செய்ய அழைப்பு விடுக்கும் வகையில், பரிந்­து­ரை­களை முன்­வைக்­கவும், தெரி­வுக்­குழு உறுப்­பி­னர்கள் தீர்­மா­னித்­துள்­ளனர்.

வஹா­பி­சம் மற்றும் அர­பு­ம­ய­மாக்கல் போக்­கு­க­ளையும்,  அதனை கட்­டுப்­ப­டுத்த எடுக்க வேண்­டிய நட­வ­டிக்­கைகள் குறித் தும் தெரி­வுக்­குழு பரிந்­துரை செய்ய முடிவு செய்­துள்­ளது,

இடை­வெ­ளிகள், பல­வீ­னங்கள் மற்றும் சீர்­தி­ருத்தம் தேவைப்­படும் பகு­தி­களை அடை­யாளம் கண்டு, மேலும் பலப்­ப­டுத்­து­வ­தற்கு, தேசிய பாது­காப்பு முன்­னு­ரி­மைகள் குறித்து விரி­வான மறு­ஆய்வை மேற்­கொள்­ளு­மாறு பரிந்­துரை செய்­யவும், தெரி­வுக்­குழு இணங்­கி­யுள்­ளது.

பணிகள், பொறுப்­புகள் மற்றும் சாத்­தி­ய­மான மேலெ­ழு­தல்­களை கருத்தில் கொண்டு பாது­காப்பு மற்றும் புல­னாய்­வுத்­து­றையின் தற்­போ­தைய கட்­ட­மைப்­பு­களை உட­ன­டி­யாக மதிப்­பீடு செய்ய வேண்டும் என்றும் கோரப்­ப­ட­வுள்­ளது.

புல­னாய்­வுத்­துறை மற்றும் பாது­காப்பு கட்­ட­மைப்­பு­களின் முக்­கி­யத்­து­வத்­தையும், அவற்றை வலு­வாக மற்றும் சுயா­தீ­ன­மா­ன­தாக மாற்­று­வதன் அவ­சி­யத்­தையும் தெரி­வுக்­கு­ழுவின் இறுதி அறிக்­கையில் முக்­கி­ய­மாக சுட்­டிக்­காட்­டப்­படும் என்று தெரி­வுக்­குழு வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

அந்த இலக்கை அடை­வ­தற்கு, குறிப்­பிட்ட கட்­ட­மைப்பு சீர்­தி­ருத்­தங்கள் அவ­சி­ய­மாகும்.

தெரி­வுக்­குழு முன்­பாக வழங்­கப்­பட்ட சாட்­சி­யங்­களின் அடிப்­ப­டையில், தேசிய பாது­காப்புச் சபையின் செயற்­பாட்டு தன்மை மற்றும் முக்­கிய சீர்­தி­ருத்­தங்­களின் அவ­சி­யத்தை சுட்­டிக்­காட்­டு­கின்­றன என்றும் அந்த வட்­டா­ரங்கள் கூறின.

இந்த சீர்­தி­ருத்­தங்கள் பாது­காப்பு மற்றும் புல­னாய்­வுத்­துறை நட­வ­டிக்­கை­களை வலுப்­ப­டுத்த வேண்டும், எதிர்­கால பாது­காப்பு அச்­சு­றுத்­தல்­களை சமா­ளிக்க வேண்டும், அதனைக் கையா­ளு­வ­தற்கு அனு­ப­வ­மிக்க பணி­யா­ளர்­களைக் கொண்ட ஒரு செய­ல­கத்­துடன், தேசிய பாது­காப்புச் சபைக்கு புத்­துயிர் கொடுக்க வேண்டும். தேசிய பாது­காப்புச் சபையின் ஆணை­யிலும் கவனம் செலுத்த வேண்டும், சீர்­தி­ருத்தம் செய்­யப்­பட்ட தேசிய பாது­காப்புச் சபை, புல­னாய்வு மற்றும் பாது­காப்பு பிரச்­சி­னைகள் குறித்த நிபு­ணத்­து­வத்தைக் கொண்­டி­ருக்க வேண்டும், முக்­கிய முன்­னேற்­றங்கள் மற்றும் எடுக்­கப்­பட வேண்­டிய நட­வ­டிக்­கைகள் குறித்து அர­சாங்­கத்­துக்கு ஆலோ­சனை வழங்க கூடி­ய­தாக இருக்க வேண்டும், பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் மற்றும் உள்­கட்­ட­மைப்பு அடிப்­ப­டையில் சம்­பந்­தப்­பட்ட அமைச்­ச­கங்­க­ளுடன் ஒருங்­கி­ணைக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் என்ற  பெயரில் நிர்­வாக பிரிவில்  ஒரு புதிய பதவி நிலையை உரு­வாக்­கவும், தெரி­வுக்­குழு அறிக்கை பரிந்­து­ரைக்கும் என்று அந்த வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.