ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை அறிவிக்கும் நிர்ப்பந்தத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணப்பட்டாலும், கட்சியின் தலைமைத்துவத்தினை தக்கவைத்துக் கொள்ள நிச்சயம் அரசியல் சூழ்ச்சியினை பிரயோகிப்பார் என எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடு கையில்,
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கவில்லை. நாட்டு மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை பெற்றுக் கொடுப்பேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் குறிப்பிட முடியாது. ஐக்கிய தேசிய கட்சியை மக்கள் புறக்கணிக்கும் போது அக்கட்சியின் பிரதித் தலைவருக்கு மாத்திரம் எவரும் சிறப்பு சலுகை வழங்க மாட்டார்கள்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இவ்வாரம் அறிவிக்கப்படுவ தாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இது வரையில் எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை.
ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளரை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக எதிர்த்தரப்பினர் குறிப்பிட்டுக் கொள்வது முற்றிலும் தவறாகும். கடந்த நான்கு வருடகாலமாக முறையற்ற நிர்வாகத்தை முன்னெடுக்கும் அரசாங்கத்தை வெளியேற் றவே மக்கள் ஜனாதிபதி தேர்தலை எதிர்பார்த்துள்ளார்கள்.
ஊழல் அற்ற அரசியல் நிர்வாகத்தை முன்னெடுப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் ஒருபோதும் குறிப்பிட முடியாது. 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையில் நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற தேசிய நிதி மோசடி உள்ளி ட்ட அனைத்து குற்றங்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் தற்போது நாட்டு மக்கள் மத்தியில் சிறந்த அரசாங்கத்தை ஏற்படுத்துவேன் என்று குறிப்பிடுவதற்கு எவரும் ஏமாற மாட்டார்கள். பலமான ஒரு தலை மைத்துவத்தின் கீழ் அரசாங்கத்தை தோற் றுவிக்க வேண்டும் என்ற பிரதான நோக் கமே அனைவருக்கும் காணப்படுகின்றது.