திரும்பி அனுப்பிய சிங்கள கடிதம் திரும்பி வந்தது தனித் தமிழில்

479 0

mmmmயாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கையினை அடுத்து வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பதில் விளக்க கடிதத்தினை உடனடியாகவே தனித் தமிழ் மொழியில் அனுப்பிவைத்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டினால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் கடந்த 24 ஆம் திகதி யாழ்.மாவட்டச் செயலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தின் முடிவில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் தமது போராட்டத்தின் நோக்கம் தொடர்பான கோரிக்கை மகஜர் ஒன்னினை கையளித்திருந்தனர்.
இவ்வாறு வடமாகாண ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்ட மகஜருக்கான பதில் விளக்க கடித்தினை பதிவுத் தபாலில் நேற்று முன்தினம் ஆளுநர் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினருக்கு அனுப்பிவைத்திருந்தார்.
இருப்பினும் ஆளுநர் தனிச் சிங்கள மொழியினால் மாணவர்களுக்கான பதில் விளக்க கடிதத்தினை அனுப்பிவைத்திருந்தார்.
தனிச் சிங்கள மொழியினால் எழுதி அனுப்பப்பட்ட கடிதத்தினை யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மீண்டும் ஆளுநருக்கே அனுப்பிவைத்திருந்தனர். தனிச் சிங்கள மொழியில் அனுப்பிவைக்கப்பட்ட அக் கடிதத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள் காட்டிய எதிர்ப்பினை அடுத்து நேற்று ஆளுநர் மாணவர்களுக்காக பதில் விளக்க கடிதத்தினை தனித் தமிழ் மொழியில் அனுப்பிவைத்திருந்தார்.
குறித்த கடிதத்தில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் கவனத்திற்கு தான் அனுப்பிவைத்துள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளர்.