திங்களன்று யாழ்.வரும் ஜனாதிபதி கீரிமலை வீடுகளை கையளிப்பார் -460 ஏக்கர் காணிகளும் கையளிக்கப்படும்-

302 0

684970773e94c332227296415566c0a2எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கீரிமலை வீட்டுத்திட்டத்தினை பயனாளிகளிடம் கையளிக்கும் அதே வேளை வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள 460 ஏக்கர் காணிகளையும் விடுவிப்பதற்கான அறிவிப்பிவை விடுக்க உள்ளார்.
இவ்விரு நிகழ்வுகளுக்கான நடவக்கைகளை தெல்லிப்பளை பிரதேச செயலகம் மற்றும் இராணுவ தரப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து இடம்பெயர்ந்து முகாங்களில் தங்கியுள்ளவர்களில், சொந்தப் பகுதியில் காணிகள் அற்ற நிலையில் வாழும் குடும்பங்களுக்கு காணிகளும், வீடுகளும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கீரிமலைப் பகுதியில் இராணுவத்தினால் வீடுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது குறித்த வீட்டுத் திட்டங்கள் முடிவுற்ற நிலையில் உள்ள.
இந்நிலையில் குறித்த வீட்டுத்திட்டத்தினை கையளிப்பதற்கான நிகழ்வினை எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமை இராணுவத்தினர் ஒழுங்கு செய்துள்ளனர். இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயனாளிகளுக்கான வீடுகளை சம்பிரதாய பூர்வமாக கையளிக்க உள்ளார்.
இந்நிகழ்வுக்காக யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து மக்களின் மீள்குடியேற்றத்திற்காக விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட 460 ஏக்கரும் விடுவிக்கப்படுவதற்கான உத்தியோக அறிவிப்பினை விடுக்க உள்ளார்.
ஜனாதிபதியின்; அறிவிப்பினை தொடர்ந்து காணி உரிமையாளர்கள் விடுவிப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று தமது காணிகளை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளத.
குறிப்பாக இதன் போது தையிட்டிப் பகுதி முழுமையாக விடுவிக்கப்படவுள்ளதுடன், மக்களுடைய குடிமனை பகுதிகள் பெரும்பாலும் விடுவிக்கப்படவுள்ளன.
இதற்கான பதிவு நடவடிக்கைகளை அந்தந்தப் பகுதி கிராம சேவர்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விடுவிக்கப்படும் பகுதிகளில் சுமார் ஆயிரும் குடும்பங்கள் மீள்குடியேறிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றன.