தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை சிறப்பு அறங்கூறுனர் சபை முன்பாக எடுத்து கொள்ள கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க அனுமதியளித்துள்ளார்.
பிரதிவாதிகள் நீதிமன்றில் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மூன்று பிரதிவாதிகள் அற்ற நிலையிலேயே இது குறித்த வழக்கு விசாரணை இடம்பெறுகிறது.
இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏனைய மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2006 ஆண்டு நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் வைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது சாரதி சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடதக்கது.