திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமா இந்தியாவின் அருணாச்சல் பிரதேசுக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பபதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
அருணாச்சல் பிரதேஸ் மாநில முதலமைச்சரின் அழைப்பின் பேரில் இந்த விஜயத்தை அவர் மேற்கொள்வுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த தினம் அமரிக்காவின் தூதுவர் இந்த பகுதிக்கு விஜயம் செய்தமை தொடர்பில் சீனா தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தது.
அருணாச்சல் பிரதேசத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் எல்லை பிரச்சினை இருக்கின்ற நிலையிலேயே சீனா இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
எனினும் திபெத்திய மதத்தலைவர் தலாய்லாமாவுக்கு சீனா தடை விதித்துள்ள நிலையில், அவர் அருணாச்சல் பிரதேசுக்கு சென்றால், சீனா கடுமையான கண்டனத்தை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.