கிழக்கு ஆப்கானிஸ்தானில் அல் கைடா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர் ஒருவரை இலக்கு வைத்து வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது.
பாருக் அல் கதானி என்ற அவர், அந்த பகுதியில் உள்ள பிராந்தியத் தலைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இதனை இன்னும் அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.