முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் வாயில் கறுப்பு துணி கட்டி கவனயீர்ப்பு நடவடிக்கை

342 0

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் வாயில் கறுப்பு துணி கட்டி கவனயீர்ப்பு நடவடிக்கைணை முன்னெடுத்தனர். அத்துடன், வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து நீதிமன்றங்களில் பணியாற்றும் சட்டத்தரணிகளும் இன்று பணிகளை புறக்கணித்து எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றனர்.

பௌத்த பிக்குவின் சடலத்தை எரிப்பது தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு புறக்கணிக்கப்பட்டு, நீதிமன்றம் அவமதிக்கப்பட்டது மற்றும் நீதிமன்ற உத்தரவுடன் சென்ற சட்டத்தரணிகள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், இன்று வடக்கு – கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். இதனால் நீதிமன்றங்களின் செயற்பாடுகள் முடங்கின.