சீரற்ற காலநிலையால் விமான பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

297 0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு 3 மணித்திலாயங்களுக்கு முன்னதாகவே வருகை தந்துவிட வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

கிழக்கு மாகாணம், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் பெய்யும் கடும் மழை காரணமாக குறித்த பிரதேசங்களில் வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன.

எனவே இப்பிரதேசங்களுக் கூடாக விமான நிலையத்திற்கு வருகை தருபவர்கள் 3 மணித்தியாலங்களுக்கு முன்னர் வருவதால் அசௌகரியங்களைக் குறைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு வழமையாக 3 மணித்தியாலயங்களுக்கு முன்னர் வருகை தந்து விட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், சீரற்ற காலநிலையால் இம்முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.