அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் தேயிலை தோட்டப்பகுதியில் மாணிக்கக்கற்கள் அகழ்வில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொகவந்தலாவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கற்கள் அகழ்வை மேற்கொண்டுவருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அப்பகுதியை சுற்றி வளைத்த பொலிஸார் சந்தோகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டு இன்று 24ம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளன