ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், பொலிஸ் திணைக்களம் மற்றும் தேர்தல் திணைக்களத்தின் அதிகாரிகள் நவம்பர் மாதம் 01 ஆம் திகதி தபால் மூலம் வாக்களிக்க முடியும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பது தொடர்பான சுற்றுநிரூபம் உரிய அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக இம்மாதம் 30 ஆம் திகதி இரவு 12 மணிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம் எனவும் இந்த கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது எனவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பங்கள் கிடைத்தவுடன் அதனை உறுதிப்படுத்தி தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு வழங்குவது அவசியமாகும்.
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்குரிய 2018ஆம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பை தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாக அல்லது 1919 தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.