தெற்கு நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவை ஆரம்பம்

252 0

மருதானை ரயில் நிலையத்தில் இருந்து பெலிஅத்த ரயில் நிலையம் வரையில் தெற்கு நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவை இன்று ஆரம்பமானது.

இன்று தொடக்கம் இந்த ரயில் சேவையில் ஈடுபடுவதுடன் இந்த ரயில் மருதானை ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.00 மணிக்கு புறப்படவுள்ளது.

கொழும்பு கோட்டை, அளுத்கம, அம்பலாங்கொடை, இக்கடுவ, காலி, வெலிகம, மாத்தறை மற்றும் பெலிஅத்த ஆகிய ரயில் நிலையங்களில் மாத்திரம் இந்த ரயில் நிறுத்தப்படும்.

இந்த ரயில் பெலிஅத்த ரயில் நிலையத்தை மாலை 6.05 இற்கு சென்றடையும். பெலிஅத்தயில் இருந்து அதிகாலை 2.20 மணிக்கு புறப்படும்.

இந்த ரயில் காலை 5.10 மணிக்கு மருதானை ரயில் நிலையத்தை வந்தடையும்.

ரயிலில் முதல் வகுப்பிற்கான பயணிகள் பெட்டி குளிரூட்டல் வசதிகளைக் கொண்டிருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.