அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனக்கு இன்னமும் நோபல் பரிசு வழங்கப்படாதமை குறித்த தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கியநாடுகள் சபையில் திங்கட்கிழமை டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

அவர்கள் நோபல்பரிசை நேர்மையாக வழங்கினால் எனக்கு பல விடயங்களிற்காக அந்த பரிசு கிடைத்திருக்கவேண்டும் என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப்  ஆனால் அவர்கள் அவ்வாறு செயற்படமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

 

ஓபாமா ஜனாதிபதியானவுடன் அவரிற்கு நோபல் பரிசை வழங்கினார்கள்,அவரிற்கே தனக்கு எதற்கு நோபல் பரிசு வழங்கினார்கள் என்பது தெரியாது எனக்கும் அதற்கான காரணம் தெரியாது என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.