உலக அளவில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் நாளாந்தம் அதிக மணித்தியாலங்கள் தொழில் புரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக பொருளியல் பேரவை நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்படி சராசரியாக பெண் ஒருவர் ஆணைக் காட்டிலும் 50 நிமிடங்கள் நாளாந்தம் அதிக நேரம் தொழில்புரிகிறார்.
இதன்படி ஒரு பெண் வருடாந்தம் ஆண்களைக் காட்டிலும் 39 நாட்கள் அதிகமாக தொழில்புரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பெண்களே அதிக நேரம் பணியாற்றுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.