தெற்கு அதிவேக வீதியின் கொக்மாதுவ – வெலிபன்ன ஆகிய வெளியேறும் பகுதிகளில் வெள்ள நீர் நிரம்பியுள்ளதால் தெற்கு அதிவேக வீதியைப் பயன்படுத்துவோர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி இரவு வரை மேலும் தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 60 கிலோ மீற்றர் வரை கட்டுப்படுத்துமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.