முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்குத் துணை நின்றபொலிஸாரை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தி வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்று செவ்வாய்க்கிழமை சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வடக்கு மாகாண நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் சட்டத்தரணி கே.சுகாஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் முல்லைத்தீவில் இன்று முற்பகல் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதற்காக யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் முல்லைத்தீவு நோக்கிப் பயணமாகியுள்ளனர்.
முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்குத் துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்தப் பொலிஸார் தவறினால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மூத்தசட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.