அரசியல் அதிகாரத்தில் மாற்றம் அவசியம் : டியூ குணசேகர

256 0

நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப அரசியல் அதிகாரத்தில் மாற்றம் அவசியமாகும். அத்துடன் அரச துறைகளின் நேர்மைத்தன்மை முற்றாக செயலிழந்துள்ளது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார்.

சோசலிக மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து செல்கின்றது. ஆனால் 2025ஆகும்போது தற்போதுள்ள பொருளாதார வளர்ச்சியை 8வீதமாக மாற்ற முடியும் என பிரதமர் தெரிவிக்கின்றார்.

பிரதமரின் இந்த கூற்று மக்களை ஏமாற்றும் வகையிலே இருக்கின்றது. ஏனெனில் 2015இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 85டொலர் பில்லியனாவே இருந்தது. தற்போது அது 93 டொலர் பில்லியனாக இருக்கின்றது. சாதாரணமாக வருடத்துக்கு 2.5 வீத வளர்ச்சியே இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான நலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொருளாதார நிபுணர்களின் மாநாடொன்றில் உரையாற்றும்போது எதிர்வரும் 2025ஆகும்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 8வீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்திருக்கின்றார். பிரதமரின் இந்த கூற்றக்கேட்டதும் அங்கிருந்த சில பொருளாதார நிபுணர்கள் தலையை பணித்து சிரித்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.