கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலை அடுத்து மே தாம் 22 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகள் தொடர்பிலான அறிக்கை கூடிய விரைவில் பகிரங்கப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான பல திட்டங்களையும் முன்னெடுத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
‘சுற்றுலாத்துறையின் எதிர்காலம்’ என்னும் தொனிப்பொருளில் இன்று திங்கட்கிழமை சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம் பெற்ற மாநாட்டில் அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரத்துங்க உட்பட சுற்றுலாத்துறையில் முக்கிய பங்காற்றும் சர்வதேச பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டதுடன், நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் பல ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டது.