சீனி, பருப்பு, பால்மா உள்ளிட்ட74 அத்தியாவசியப் பொருட்களுக்கும் சுகாதார சேவைகளுக்கான வற் வரி புதிய பெறுமதி சேர் திருத்த மூலத்தில் விலக்களிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சபையில் அறிவித்தார்.
அத்துடன் புதிய திருத்த சட்டமூலத்தில் மதுபானம், சிகரெட் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியன வற்வரி விதிப்புக்கு உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய திருத்த சட்டமூலத்தின் பிரகாரம் வற் வரி மூலமாக 180 கோடி ரூபா வருமானம் கிடைக்கப்பெறும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று(27) பெறுமதி சேர் திருத்தச் சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.