சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான வழக்கு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கல்கிஸ்ஸ மாவட்ட நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லசந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு அதிகாரியும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
மேலும், லசந்த விக்ரமதுங்கவை நானே கொலை செய்தேன் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட ஓய்வுப் பெற்ற இராணுவ அதிகாரியின் விசாரணை அறிக்கையும் இன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.