பிக்குவின் உடலை,நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்ய தடை-முல்லைத்தீவு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

218 0

முல்லைத்தீவு நீராவியடி பிக்குவின் உடலை,நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்ய தடை உத்தரவிட்டுள்ள விதித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம்,தேரரின் உடலை இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறும் தீர்ப்பளித்துள்ளது.

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்திலுள்ள விகாரையின் தேரரான மேதலங்கார கீர்த்தி தேரரின் உடலை நீராவியடியில் தகனம் செய்வது குறித்த இறுதி தீர்மானத்தை,முல்லைத்தீவு நீதிமன்றம் இன்று அறிவிக்கவிருந்த நிலையில், முல்லைத்தீவு நீதிமன்றிற்கு பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் குழுவினர் மற்றும் பெருமளவு சிங்கள சட்டத்தரணிகள் சென்றிருந்தனர்.

ஆலய நிர்வாகத்தின் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம், வி.மணிவண்ணன்,க.சுகாஸ் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

தொடர்ந்து இன்று முற்பகல் 11.30 மணியளவில், மேதலங்கார கீர்த்தி தேரரின் உடலை நீராவியடியில் தகனம் செய்வது குறித்த இறுதி தீர்மானத்தை, முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, முல்லைத்தீவு நீராவியடி பிக்குவின் உடலை, நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்ய தடை உத்தரவிட்டுள்ள விதித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம்,

தேரரின் உடலை இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறும் தீர்ப்பளித்துள்ளது.
இதனையடுத்து நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, முன்னதாகஇ கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரர் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அத்துமீறி விகாரை அமைத்திருந்த நிலையில்இ முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு வழிபாட்டுக்கு செல்லும் மக்களுடன் முரண்பட்டிருந்தார்.
இதனையடுத்துஇ குறித்த விடயம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸாரினால் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இரு தரப்பும் சமாதான முறையில் தமது வழிபாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளலாம் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து கடந்த மாதம் வவுனியா மேல்நீதிமன்றில் குறித்த பௌத்த தேரரின் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவருகின்ற நிலையில், தேரர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் மஹரகம வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்த பௌத்த மதகுருவின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து பிரதேச மக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் இந்த விவகாரம் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சம்பவம் குறித்து ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆலய வளாகத்தில் மதகுருவின் உடலை தகனம் செய்ய இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.

அத்தோடு, இந்த விடயம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படுமென்றும் தெரிவித்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அவரின் பூதவுடலை குறித்த பகுதியில் புதைக்கவோ அல்லது எரிக்கவோகூடாது என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில்,உயிரிழந்த பௌத்த தேரரின் பூதவுடல் பழைய செம்மலை நீராவியடியில் தற்போது வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

பௌத்த மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரநிதிகள் ஆகியோர் பௌத்த தேரரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதேவேளை,நேற்றைய தினம் பௌத்த தேரரின் உடல் அங்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு பெருமளவான தமிழ் மக்களும் ஒன்றுகூடியிருந்தனர். அத்தோடு தேரரின் உடலை அங்கு தகனம் செய்ய வேண்டுமென தேரரருக்கு ஆதரவான சிலர் கூறியமையால் அங்கு சில மணித்தியாலங்கள் பதற்றமான சூழ்நிலை நிலவியிருந்தது.

இந்நிலையில், தேரரின் இறுதிச்சடங்கு தொடர்பான இறுதி தீர்மானம் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றினால் அறிவிக்கப்படவுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினரும், தற்போது விகாரையில் விகாராதிபதியாக உள்ள தேரரும் இன்று காலை மன்றில் முன்னிலையாக வேண்டும் என முல்லைத்தீவு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கமைய, தேரர்கள் மற்றும் தமிழ், சிங்கள சட்டத்தரணிகள் பலரும் முல்லைத்தீவு நீதிமன்றில் கூடினர்.
பல மணி நேர விவாதத்திற்குப் பின்னர், குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியது.

இத்தீர்ப்பில் நீராவியடி பிக்குவின் உடலை, நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், தேரரின் உடலை இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல் கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் புதைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றமும், மோதல் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

பௌத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்தில் புதைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஞானசாரர் தலைமையிலான பிக்குகள் ஆரம்பித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு எழுத்துமூலம் வழங்கப்படுவதற்கு முன்னர் பௌத்த பிக்குவின் உடலை இவ்வாறு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் புதைக்க, ஞானசார தேரர் தரப்பு நடவடிக்கையெடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.