டிரக் வாகனத்தின் சில்லில் சிக்கி ஒருவர் பலி

257 0

நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கல்பிடிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (22) மதியம் 1.35 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கண்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல டிரக் வாகனம் ஒன்று முற்பட்டுள்ள நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது, டிரக் வாகனத்தின் பின் சக்கரத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

அதனை தொடர்ந்து வத்துபிட்டிவல வைத்திசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

58 வயதுடைய நபர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் டிரக் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.