நாடாளவிய ரீதியில் சுமார் 28 அரச தொழிற்சங்க ஊழியர்கள் இன்று ஒரு நாள் சுகயீனவிடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போரட்டத்தின் காரணமாக கடவுசீட்டு,அடையாள அட்டை உள்ளிட்ட பொதுசேவைகளின் ஒரு நாள் சேவை பாதிப்படையும் என கூறப்படுகின்றது.
நிறைவேற்று உத்தியோகத்தர்களுக்கு ரூபா 50,000 சம்ளம் வழங்குவதற்காக அமைச்சரவை பத்திரம் ஒன்றை எதிர்வரும் 2019.09.24 ஆம் திகதி அமைச்சரவை அனுமதிகக்காக சமர்பிக்கப்படவுள்ளது.
இவ்வேளையில் அரச சேவையை சேர்ந்த ஏனைய 90 வீதமான அரச உத்தியுாகத்தர்களுக்கான சம்பளத்தில் பாரிய முரண்பாடு இதனால் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்திக்கொண்டு மேற்படி கொடுப்பனவில் ஒரு குறிப்பிட்ட வீதத்தினை ஏனைய சேவைகளை சேர்ந்து அரச உத்தியோகத்தர்களுக்கும் வழங்க கோரி அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற்சங்கம் இன்று நாடளாவிய ரீதியில் பாரிய ஒரு நாள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்கள்.
இதனோடு இணைந்து இலங்கை நிருவாக உத்தியோகத்தர்கள் சங்கம் இலங்கை தொழில்நுட்ப சேவை மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை என்பவற்றுடன் மேலும் 17 இற்கு மேற்பட்ட தொழிற்சங்கங்ககளும் நாடாளவிய ரீதியில் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.