வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலத்தில் தரம் 3 இல் கல்விகற்கும் மாணவி மீது அங்கசேட்டை மேற்கொண்டதாக தெரிவித்து நெடுங்கேணி பொலிசாரால் இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யபட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக தெரிய வருகையில்,
நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் தரம் 3 இல் கல்வி கற்றுவரும் சிறுமிக்கு விசேட வகுப்பு இருப்பதாக பாடசாலை ஆசிரியர் அறிவித்ததை தொடர்ந்து நேற்று காலையில் குறித்த மாணவியின் தந்தை தனது மகளை பாடசாலை அழைத்து சென்று விட்டுள்ளார்.
இந்நிலையில் காலை 11.30 மணிக்கு வகுப்பு முடிவுற்றநிலையில் குறித்த மாணவி வீடு செல்வதற்காக தனது தந்தையின் வருகையை எதிர்பார்த்து தனிமையில் நின்றுள்ளார். இதன்போது பாடசாலையில் கட்டட வேலை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சிறுமி மீது அங்க சேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து சுதாகரித்து கொண்ட சிறுமி தனக்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொண்ட நிலையில் அவர்களிடமிருந்து தப்பிசென்று பாடசாலையில் இருந்து 800 மீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் தனது தந்தையின் வியாபார நிலையத்திற்கு சென்று தனக்கு நடந்ததை தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
நடந்ததை அறிந்து அதிர்சியடைந்த தந்தை பாடசாலைக்கு சென்று குறித்த இளைஞர்களுடன் முரண்பட்டதுடன், அவசர பொலிசாருக்கும் தகவல் தெரிவித்திருந்தார். குறித்த சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் இரண்டு இளைஞர்களை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந் நிலையில் பாடசாலையின் அதிபரிடம் இவ் விடயம் தொடர்பாக கேட்டபோது
குறித்த சம்பவம் இடம்பெற்றதற்கான காட்சிகள் எவையும் பாடசாலையில் பொருத்தபட்டுள்ள கண்காணிப்பு கெமராக்களில் பதிவாகவில்லை. இவ்விடயம் தொடர்பாக தெளிவான பதில் ஒன்றை எதிர்வரும் நாட்களில் அனைவருக்கும் தெரியப்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.