மக்களின் நலனை கருத்திற்கொண்டு திங்கட்கிழமை முதல்வற் வரி விதிப்பில் விசேட திருத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.பதுளை கிராந்துருகோட்டை மகாவலி விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற சிறுநீரக நோய் ஒழிப்பு வேலைத்திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் உரையாற்றுமைகயில்,நாட்டின் கடன் சுமையிலிருந்து மீளும் வகையில் அரசாங்கத்தினால புதிய வற்வரிகளை அறிமுகப்படுத்த வேண்டியேற்பட்டது. இருந்தபோதிலும் வற் வரி விதிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் நாட்டின் சாதாரண பொதுமக்களின் அன்றாட வாழ்கையில் பெரும் அசௌகரியங்களைக் எதிர்கொண்டுள்ளனர்.
எனவே பொதுமக்களின் அசௌகரித்தை கருத்திற்கொண்டு மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு திட்டமிட்டுள்ளேன். இதன்பிரகாரம் திங்கட்கிழமையன்று விசேட வரி திருத்தம் செய்யவுள்ளேன்.அத்துடன் அரசாங்க அதிகாரிகளின் வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பாக எழுந்துள்ள நிலைமைகளைக் கவனத்திற்கொண்டு அவர்களின் இழந்துபோன சலுகையை மீண்டும் பெற்றுக்கொடுக்க சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே மக்களின் நலன் கருதியே இவ்வாறான சலுகை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளேன் என்றார்.