யாழ்.பல்கலை மாணவர்கள் சுட்டுக் கொலை குற்றப் புலனாய்வு தீவிர விசாரணை

331 0

k800_img_3210யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிப் சூடு நடாத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பில் இருந்து வருகைதந்துள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ் விசாரணைகளை சம்பவ இடத்தில் உள்ள பொது மக்கள் மற்றும் அயலவர்களிடம் இருந்து குற்றப் புலனாய்பு விரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை காங்கேசன்துறை வீதி கொக்குவில் – குளப்பிட்டிப் பகுதியால் சென்று கொண்டிருந்த பல்கலைக்கழக இரு மாணவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டிருந்தனர். இச் சம்பவத்தில் இரு மாணவர்களும் கொல்லப்பட்டிருந்தனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தினை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உடனடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார்.
இவ்விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு, கொழும்பில் உள்ள விசேட குற்றத் தடுப்பு பொலிஸாரை குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் ஊடாக பணிப்புரை விடுத்திருந்தார்.
இதன்படி யாழ்ப்பாணத்திற்கு விரைந்த விசேட குற்றப் புலனாய்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 பொலிஸ் உத்தியோகஸ்தர்களிடமும் விசாரணைகளை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
கைது செய்யப்பட்வர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப் புலனாய்பு பிரிவினர் தமது விசாரணைகளை துரிதப்படுத்தும் வகையில் சம்பவ இடமான துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்ட பகுதியிலும், மாணவர்களின் மோட்டார் சைக்கில் மீட்கப்பட்ட பகுதியிலும் உள்ள பொது மக்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு ஆரம்பித்துள்னர்.
குறிப்பாக துப்பாக்கிச் சூடு நடாத்தும் போது பொலிஸார் நிலை கொண்டிருந்த கல்லூரி வீதி காங்கேசன் துறை வீதியுடன் இணையும் பகுதியில் உள்ள வீடுகளில் உள்ளவர்களிடம் இவர்கள் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.