83 போல் மோசமான நிலைமை உருவாகும் அபாயம் – தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

270 0

coldinesh-gunawardene182602269_4892359_25102016_kll_cmy1983ஆம் ஆண்டில் இன்றுள்ளது போன்ற மோசமான பின்னணியிலே நாட்டின் பெரும் குழுப்ப நிலை உருவானது.

அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியுள்ளதாக ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

வடக்கில் யாழ்ப்பாணம், கல்பிட்டி, சுன்னாகம் மட்டக்குளி ஆகிய பிரதேசங்களில் ஆயுதம், வாள் என்பன பயன்படுத்தி கொலை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

சட்டம் ஒழுங்கை செயற்படுத்துவதில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது.

கல்பிட்டியில் மீனவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து வீதியில் இறங்கினர்.

இதன்போது ஏற்பட்ட மோதலில் 10ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வாகனங்கள் படகுகள் தீ வைக்கப்பட்டன. பொலிஸாரினால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை.

23ஆம் திகதி சுன்னாகத்தில் இரு புலனாய்வு அதிகாரிகள் வெட்டித் தாக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்குளி பிரதேசத்தில் சட்டவிரோத ஆயுதக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது.

சட்டம் அமுல்படுத்துவதிலும், பாதுகாப்பை உறுதி செய்வதிலும் பொது மக்களினதும் பல்கலைக்கழக மாணவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் வழங்குவதில் பிரச்சினையும் அச்சுறுத்தலும் எழுந்துள்ளது.

1983ஆம் ஆண்டிலும் இவ்வாறான பின்னணியில் தான் நாட்டில் பெரும் குழப்பம் வெடித்தது எனவும் வாசுதேவ நாணயகார குறிப்பிட்டார்.