ரூபவாஹினியை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்தமைக்கு எதிராக மனு

291 0

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் வெளியான வர்த்மானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரிக்கை விடுத்து அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று உயர்நீதிமன்றில் இன்று (17) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சிவில் செயற்பாட்டாளர்களான தம்பர அமில தேரர் மற்றும் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு அமைய, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் மகாவலி ஆகிய அமைச்சுக்களை மாத்திரம் ஜனாதிபதி தம்வசம் வைத்திருக்க முடியும் என,  மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஊடகத்துறைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் ஒருவர் இருக்கையில்  ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை ஜனாதிபதிக்கு பெறுப்பான பாதுகாப்பு அமைச்சில் கீழ் கொண்டுவருவது சட்டவிரோதமானது என, அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதாக, வர்த்தமான அறிவித்தல் கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.