பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, காஷ்மீர் அரசியல் சட்டம் 370 நீக்கப்பட்டதை சித்தரிக்கும் வகையிலான கேக்கை பாஜகவினர் வெட்டி கொண்டாடினர்.பிரதமர் மோடி இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த தினமான இன்று வழக்கம் போல், சொந்த மாநிலமான குஜராத் சென்று, தனது தாயார் ஹீராபென் மோடியை சந்தித்து ஆசி பெறும் பிரதமர், தொடர்ந்து அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார். பிரதமர் மோடியின் பிறந்த நாளை, கடந்த 14 ஆம் தேதி முதல் சேவை வாரமாக கொண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை குறிக்கும் வகையில் பிறந்தநாளை கொண்டாடிவருகின்றனர்.
சூரத்தைச் சேர்ந்த ஒரு பேக்கரி நிறுவனம், சுமார் 7000 கிலோ எடையில், 700 அடி நீள கேக் வெட்டி மோடியின் பிறந்தநாளை கொண்டாட உள்ளது. மேலும், 370 பள்ளிகளில் படிக்கும் 12000 குழந்தைகளுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்க உள்ளது.