சென்னை உயர் நீதிமன்றத்தில் குண்டு வெடிக்கும்: தேதி குறிப்பிட்டு கடிதம் எழுதிய வட மாநில நபர்!

298 0

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக உயர்நீதிமன்ற பதிவாளருக்கு டெல்லியில் இருந்து வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகம் முழுதும் தீவிர சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு டெல்லியில் கடிதம் ஒன்று உயர் நீதிமன்ற பதிவாளருக்கு வந்தது. அதில் மோடி நகரைச் சேர்ந்த இண்டர்நேஷனல் காலிஸ்தான் தீவிரவாத இயக்க ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்த ஹர்தர்ஷன் சிங் நக்பால் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.

“தெற்கிலிருந்து மத்திய பிரதேசம், அங்கிருந்து உத்தரபிரதேசம், அங்கிருந்து டெல்லி என இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பேன். செல்போன் சிம்கார்டுகளையும் மாற்றிக்கொண்டே இருப்பதால் என்னை பிடிக்க முடியாது. வரும் 30-ம் தேதி திட்டமிட்டப்படி எனது மகனுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல இடங்களில் திட்டப்படி குண்டுகள் வெடிக்கும்”. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து உயர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.