வீட்டில் பாம்புகள், முதலைகளை காண்பித்து பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக வீடியோ வெளியிட்ட பாகிஸ்தான் பாடகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ரபி பிர்சாடா. இவர் கடந்த 5ம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் முதலைகள், பாம்புகளை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:
நான் காஷ்மீர் பெண். இந்த பரிசுகள்(பாம்புகள், முதலைகள்) மோடிக்காகத்தான். நீங்கள் காஷ்மீர் மக்களை மிகவும் துன்புறுத்துகிறீர்கள். இதற்காக இவற்றை தயாராக வைத்துள்ளேன்.
நீங்கள் நரகத்தில் இறக்க தயாராக இருங்கள். என் நண்பர்களாகிய இவர்கள் (பாம்புகள், முதலைகள்) உங்களுக்கு விருந்து வைப்பார்கள்.
இது குறித்து கோர்ட்டும் ரபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.