தங்கம் விலை சவரனுக்கு ரூ.336 உயர்வு

270 0

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.29,008க்கு விற்பனையாகிறது.சர்வதேச சந்தை நிலவரம் காரணமாக தங்கத்தின் விலை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே படிப்படியாக உயர்ந்தது.

2 வார இடைவெளியில் பவுனுக்கு ரூ.2ஆயிரத்திற்கு மேல் உயர்ந்தது. தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை கடந்த 4-ந்தேதி இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பவுனுக்கு ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டது.

ஆனால் அன்று மாலையே தங்கத்தின் விலை சற்று குறைந்தது. அதன் பிறகு மீண்டும் படிப்படியாக விலை குறைந்து கொண்டே இருந்தது.

கடந்த 10 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,498 வரை குறைந்து நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3584-க்கும், ஒரு பவுன் ரூ.28,672-க்கும் விற்பனை ஆனது.

கடுமையாக உயர்ந்த தங்கத்தின் விலை ஓரளவு குறைந்தது பெண்கள் இடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது. இன்று ஒரு கிராமுக்கு ரூ.42 அதிகரித்து ஒரு கிராம் ரூ.3,626-க்கு விற்பனை ஆனது.

இதனால் ஒரு பவுனுக்கு ரூ.336 உயர்ந்து மீண்டும் ஒரு பவுன் விலை ரூ.29,008க்கு விற்பனையாகிறது.