பரந்துப்பட்ட கூட்டணி இன்னும் இரண்டு வார காலத்திற்குள் வெற்றிகரமாக உருவாக்கப்படும். தற்போது சின்னம் குறித்து எழுந்துள்ள கருத்து வேறுப்பாடுகளுக்கு எத்தரப்பிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வு கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக பலமான அரசாங்கத்தை தோற்றுவித்து நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதே பிரதான நோக்கமாக காணப்படுகின்றது. பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் செலுத்தும் பங்காளி கட்சிகளுடனான கூட்டணி இவ்வாரத்திற்குள் ‘பொதுஜன ஜனநாயன முன்னணி ‘ என்ற நாமத்தில் உதயமாகும்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ அடுத்த மாதம் வடக்கிற்கு விஜயம் செய்வார்.தமிழ் மக்கள் மத்தியில் அவர் தொடர்பில் தவறான சித்தரிப்புக்கள் மாத்திரமே காணப்படுகின்றது. ஒரு இனத்திற்காக மாத்திரம் யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்படவில்லை. ஆகவே அனைத்து இனத்தவர்களின் ஆதரவுடன் ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்படும் என்றார்.