ஐக்கிய தேசிய கட்சிக்குள் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்ற போட்டிக்கு விரைவில் தீர்வு எட்டப்படாவிட்டால் கட்சியின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும் எனத் தெரிவித்த அக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ரணில் , சஜீத், கரு ஆகிய மூவரும் ஒன்றிணைந்து ஒரே மேசையில் அமர்ந்து இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுக்கான வேண்டும் என்றும் கூறினார்.
நான் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய வேளையில் பல்வேறுப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கினேன். கட்சி தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை மாற்ற வேண்டுமென பலர் போராட்டங்கள் நடத்தினர்.
இப் போராட்டம் வெற்றிப் பெறாததால் பலர் கட்சியை விட்டு வேறு கட்சிகளுக்கு சென்றனர். சிலர் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். இவ்வளவு பிரச்சினையும் சமாளித்து கட்சியை வழிநடத்திய பெருமை எனக்குண்டு.
ஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணையும் நோக்கம் உண்டா என கேட்டப்போது , நாட்டை பாதுகாக்கும் நல்லாட்சியை வழங்கும் கட்சியுடன் இணையத்தயார் என அவர் மேலும் தெரிவித்தார்.