ஜெனிவாவை அண்மித்துள்ள நடைபயணப் போராட்டம்!

454 0

தமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கடந்த 28.08.2019 பாரிசிலிருந்து ஆரம்பமாகிய நடைபயணம்போராட்டம் இன்று (14.09.2019) சனிக்கிழமை 18 ஆவது நாளாக சுவிசு நாட்டின் ஜெனீவா எல்லையில் நின்று கொண்டிருக்கின்றது. MOREZ என்னும் நகரை நோக்கி இன்று நடைபயணம் இடம் பெறவுள்ளது.

உயர்ந்த மலைகளும் பாதுகாப்பற்ற கனரகவாகனப் பாதைகளும் கொண்ட பகுதியால் இந்த நடைபயணம் இடம்பெற்று வருகின்றது. நேற்றைய தினம் நடைபயணப்போராளிகளை சந்தித்த பிரான்சு காவல்துறையினர் இந்த பாதையின் அபாயம் பற்றியும் எதுவும் நடந்தால் தாம் அதற்குப் பொறுப்பல்ல என்பதையும் தெரியப்படுத்தி உங்கள் போராட்டம் வெற்றியளிக்க வேண்டும் என்று வாழ்த்துகள் தெரிவித்தனர்.

எமது நடைபயணம் பற்றி சுவிஸ் எல்லை காவல்துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்தனர். இன்று சுவிசு நாடு சென்றடையவுள்ள இவர்களை சுவிசு ஜெனீவா வாழ் மக்கள் வரவேற்கத் தயாராகவுள்ளனர்.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு -ஊடகப்பிரிவு)