மக்கள் வாக்களித்து நாட்டின் உயரிய பதவியை வழங்குவது தனக்கும் தங்கள் குடும்பத்திற்கும் சேவையாற்றுவதற்காக அல்ல என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நிக்கரவெட்டிய பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் இதனை கூறினார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ´நாட்டில் உருவான அனைத்து ஜனாதிபதிகளும் பதவியேற்பு விழாவை நடத்தியுள்ளனர்.
எனக்கும் அவ்வாறான பதவியேற்பு நிகழ்வை நடத்த வேண்டி ஏற்படுமோ தெரியவில்லை. நாட்டு மக்களே இது குறித்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்´ என்றார்
செமட்ட செவண வேலைத்திட்டத்தின் கீழ் நிக்கரவெட்டிய ஜயந்தி மத்திய மகா வித்தியாலயத்திற்கு பஸ் வண்டி ஒன்றை அர்ப்பணிப்பு செய்யும் நிகழ்வு நேற்று (13) இடம்பெற்றது.
46 இலட்சம் பெறுமதியான இந்த பஸ் வண்டி தனவந்தர் ஒருவரால் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
இந்த பஸ் வண்டியை செலுத்தியவாறு அமைச்சர் சஜித் பிரேமதாச குறித்த பாடசாலையை அடைந்தமை குறிப்பிடதக்கது.