ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பை விடுப்பது குறித்து அரசியல் கட்சிகளால் தீர்மானிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பை விடுப்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதனால் தேர்தல் அறிவிப்பை முன்கூட்டியே வெளியிடுவதாயின் நாளை மறுதினமே வெளியிட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தேர்தல் ஆணைக்குழு கலந்துரையாடி, பொருத்தமான தினத்தில் தேர்தல் நடாத்தப்படுவது குறித்த அறிவித்தலினை வெளியிடும் என மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.
எதிர்வரும் 16 முதல் ஒக்டோபர் 15 வரையுள்ள எந்த நாளாகவும் இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு பின்னரான எந்த தினத்திலும் வேட்புமனுவைக் கோர முடியும் எனவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
முன்னதாக நாங்கள் முடிவு செய்யலாம் என்று நினைத்தால், இந்த மாத இறுதிக்குள் அதனை அறிவிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.