வெற்றிப் பெறக்கூடிய ஒருவரையே ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும் என்ற சமிக்ஞையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுவிட்டதாக அஜித் பி.பெரோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அஜித் பி.பெரோ மேலும் கூறியுள்ளதாவது, “அலரிமாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட செய்தியை நாம் அனைவரும் பார்த்தோம்.
அதில், பிரதமர் ரணில், நாடு மற்றும் கட்சியின் தீர்மானங்களுக்கு மதிப்பளிப்பதாக கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக அவர் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அறிவித்தலும் விடுத்துள்ளார்.
அத்தோடு, அரசியலில் இருந்து ஓய்வுப்பெற தான் என்றும் தயங்கியதில்லை என்ற கருத்தையும் அவர் முன்வைத்திருந்தார்.
இதன் ஊடாகவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்பளிக்கத் தயாராக உள்ளார் என்பது தெளிவாகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.