கடவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிமெட்டியகார பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கம்பம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் ராகம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
17 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் கடவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.